ஊர்காவற்றுறை இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Wednesday, June 15th, 2016

ஊர்காவற்றுறை – கண்ணகி அம்மன் இறங்குதுறையும் வீதியும் சேதமடைந்துள்ள நிலையில் தாம் பயணங்களை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்குவதாக டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய செயலாளர் நாயகம் குறித்த விடயம் தொடர்பாக தொலைபேசி வாயிலாக துறைசார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டதுடன் அது தொடர்பிலான திட்ட அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஊர்காவற்றுறையிலுள்ள குறித்த இறங்குதுறையூடாகவும் வீதியூடாகவும் நாளாந்தம் பெருமளவிலான மக்கள் தமது போக்குவரத்துகளை மேற்கொண்டு வருகின்றனர்.

90களில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக அப்போதைய அவரது அமைச்சினூடாக குறித்த இறங்குதுறையும் மக்கள் தங்கிச்செல்லும் மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டிருந்த அதேவேளை வீதியும் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்ணகி அம்மன் இறங்குதுறை முன்னர் பனைமரங்களைக்கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியினால் சீமெந்து கொண்டு நிரந்தரமாக குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டமை சுட்டிகாகட்டத்தக்கது.

kayts 5

kayts 1

kayts 2

Related posts:

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? - நாடாளுமன்றில் டக்ளஸ்...
எமது மக்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொன்னான வாய்ப்பு இது – அமைச்சர் டக்...