ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் உப அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் – மன்றில் டக்ளஸ் M.P. கோரிக்கை!

Saturday, November 25th, 2017

யாழ் தீவகப் பகுதிகளுக்கு என ஊர்காவற்துறை பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் உப அலுவலகம் அமைக்கப்பட்டால் அது மிகவும் பயனுள்ளதாக அமையும் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு பிராந்நிய இலங்கை போக்குவரத்துச் சபை திடீர் பரிசோதனை குழு பயிற்சி பாடசலைக்கு 3 ஜீப் வாகனங்கள் தேவைப்படுவதாகக் கோரப்படுகின்றது.

அனைத்து பணியாளர்களினதும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவை வைப்பிலடப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

மேலும், வடக்கு மாகாண சபையின் நிர்வாக மையம் யாழ்ப்பாணத்தில் செயற்படுகின்ற நிலையில், மாகாணத்தின் தொலை தூர பகுதிகளில் உள்ள மக்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்துச் சேவையுடன் இணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

அதேபோன்று, தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கான போக்குவரத்துச் சேவையானது, வவுனியா – மிஹிந்தலை – ஹபரன ஊடாக மட்டக்களப்பு என்ற வழித்தடத்திலேய மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் மேலுமொரு யாழ் – மட்டக்களப்பு போக்குவரத்துச் சேவை வவுனியா – திருகோணமலை – கிண்ணியா – மூதூர் – கிளிவெட்டி – வாகரை – வாழைச்சேனை ஊடாக மட்டக்களப்பு என அமைய வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், மேற்படி விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் அவாதனத்தில் கொண்டு சாதகமான ஏற்பாடுகளை முன்னெடுப்பார் என்ற எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவ...
தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்!
உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்...

புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் ...
தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறு...