ஊர்காவற்துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஷேட விஜயம் – வீடுகளை அமைப்பதற்காக இனங்கானப்பட்ட காணியையும் பார்வையிட்டார்!
Monday, December 25th, 2023
ஊர்காவற்றுறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ள வீடுகளை அமைக்கவென தனியார் ஒருவரினால் வழங்கப்பட்டு இனங்கானப்பட்ட காணியை பார்வையிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைவாக வீடுகள் அற்றவர்களுக்கு என வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் ரூபா பொறுமதியான 20 மீன்வலு சூரிய ஒளி சக்திகொண்ட சோழர் பொருத்திய 25 ஆயிரம் வீடுகள் கட்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உர்காவற்றுறை தம்பாட்டியில் Cm Blue Crab தனியார் முதலீட்டாளரினால் நடாத்தப்படும் நண்டு பதனிடும் நிறுவனத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அங்கு மேற்கொள்ளும் பதனிடும் பணிகளை பார்வையிடிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


