உள்ளூராட்சி தேர்தலை  வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்  -வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2017

உள்ளூராட்சி சபை தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியானது எமது மக்களின் வெற்றியாகவே நாம் கருதுகின்றோம் என சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இவ் வேட்புமனு இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வேட்பாளர் பட்டியலை நாம் இன்று கையளித்துள்ளோம். வெற்றி நிச்சயம் என்பதையும் இதனூடாக தெரிவித்துக்கொள்கின்றோம். உள்ளூராட்சி சபை தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியானது எமது மக்களின் வெற்றியாகக அமையும் என்பதுடன் இந்த வெற்றிக்கூடாக எமது மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி, அரசியல் உரிமை உள்ளிட்டவற்றிற்கான தீர்வாகவும் இந்த வெற்றி பயன்படுத்தப்படும் என்பதை நான் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

யாழ் மாவட்டத்தை பொறுத்தவகையில் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் எமது கட்சியின் சின்னமான வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம். அதுபோல முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய பிரதேச சபைகளிலும் நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம்.

அதேபோல கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மாவட்டங்களின் பிரதேச சபைகளிலும் நாம் போட்டியிடவுள்ளோம் என தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எக்காலத்திலும் பிரிக்கப்பட முடியாத வடகிழக்கு ஓர் தனி அலகு என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் – என்றார்.

இதனிடையே வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் வானம் பூ மழை தூவி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – புங்குடுதீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள யாழ். ஸ்ர...
தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்ச...

தேசமெங்கும் நிரந்தர ஒளிவீச தீபச்சுடர்கள் ஏற்றுவோம்! - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா...
அனைத்து அரசியல் தளங்களிலும் கட்சியைநிலை நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் - செயலாளர் நாயகம் ...
அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவ...