உருவாகியிருக்கும் அமைதியான சூழலை பாதுகாத்து வலுப்படுத்த முனைபவர்களின் கரங்களை மக்கள் வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Sunday, January 16th, 2022
உருவாகியிருக்கின்ற அமைதியான சூழலை பாதுகாத்து வலுப்படுத்த முனைகின்றவர்களின் கரங்களை மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான சிந்தனை கொண்டவர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பழை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முதலாவது ஆண்டு நிறைவு மற்றும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அதனிடையே தெல்லிப்பழை பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கான வலைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கிவைத்தார்.
தெல்லிப்பழை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனிடையே யாழ். அளவெட்டிப் பிரதேசத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற மூத்த விவசாயியான சிவலோகநாதன் என்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இரசாயண கலப்பில்லாத தூய உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தின் அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தெல்லிப்பழை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் ஏற்பாட்டில் குறித்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உலகளாவிய ரீதியில் நாதஸ்வர இசை மூலம் எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்து வருகின்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனின் மங்கல இசையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்டுகளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


