.ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின வாகனப் பேரணிகள் யாழ் மற்றும் சாவகச்சேரியிலிருந்து பேரெழுச்சியுடன் பருத்தித்துறை நோக்கி பயணம்!

Wednesday, May 1st, 2024


இன்று உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணி, பருத்தித்துறை நகரை நோக்கி .யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதி வழியாக ஆரம்பித்துள்ளது
இதேநேரம் மற்றொரு வாகன பேரணி சாவகச்சேரியிலுள்ள கட்சியின் அலுவலக முன்றலிலிருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பித்து பருத்தித்துறையை நோக்கி பயணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
000

Related posts: