ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவம் ஆரம்பம்!
Saturday, March 17th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெகு விமரிசையாக ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ள இந் நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 98 உறுப்பினர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் சந்தியப்பிரமாணம் மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த நிகழ்வில் கட்சியின் மாவட்டங்களினது நிர்வாக செயலாளர்கள் உதவி நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேசங்களினது நிர்வாக செயலாளரகள் உதவி நிர்வாக செயலாளர்களுடன் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.



Related posts:
காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து...
மக்களுக்கு பயனுள்ள வகையில் கடற்றொழில் செயற்பாடுகள் அமையவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
தையிட்டி இறங்கு துறை பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – கடற்றொழிலாளர் பிரச்சினை தொட...
|
|
|


