ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எழுச்சியுடன் ஆரம்பம்!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு மிக எழுச்சியுடன் சற்றுமுன் ஆரம்பமானது.
கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் கொடியை மற்றும் மங்கள விளக்கை ஏற்றிவைத்து நிகழ்வுகளை சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.
வரையறுக்கப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நடைபெறும் முதல்நாள் அமர்வில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளதுடன் கட்சியின் கொள்கை பிரகடனமும் முன்மொழியப்பட்டு விவாதத்துக்கெடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே கம்பரலிய, சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்...
தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் - யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்க...
பேலியகொட மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - சுகாதாரம் தொடர்பாக அதீத கரிசனை!
|
|