இலஞ்சம் ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு இன்று என்ன நடந்துள்ளது? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, November 17th, 2017

சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகவும், அதே நேரம், சுயாதீன ஆணைக்குழுக்கள்மீது எமது நாட்டு மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் சிதைந்து விடாத வகையலும்; செயற்பட வேண்டும். அதற்குரிய சூழலை உரிய அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஏற்படுத்த வேண்டும். மேற்படி சுயாதீன ஆணைக்குழுக்கள்மீது மக்கள் சந்தேகம் கொள்கின்ற வகையிலான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்கலாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,

சில ஆணைக் குழுக்களுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதியானது, உரிய காலகட்டத்தில் செலவு செய்யப்படாமல், திறைசேரிக்கு மீளத் திரும்புவதாகவும், கணக்காய்வாளர் தலைமை அதிபதி அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக அண்மையில் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்தச் செய்தி உண்மையானால், இத்தகைய நிலைமைகள் ஏன் ஏற்படுகின்றன என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

இந்த அரசு ஆட்சிபீடமேறிய ஆரம்ப காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்டிருந்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு இன்று என்ன நடந்துள்ளது? என்றே தெரியாத அளவுக்கு நிலைமை மாறிவிட்டுள்ளது.

குற்றங்கள் சுமத்தப்படுகின்ற நபர்களது பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும், சமூகத்தில் அவர்களுக்கிருக்கின்ற நற்பெயரை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், ஒருவரால் ஒரு குற்றச்சாட்டு ஒரு நபர்மீது சுமத்தப்படுமானால், அது உண்மையானதா? பொய்யானதா என்பது குறித்து ஆராய்ந்து, அதனை உறுதிப்படுத்தும் வரையில் அதனை பகிரங்கப்படுத்தாது, குற்றம் சுமத்தப்பட்டவர் மீது வீண்பழிகள் சுமத்தப்படாத வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதும், பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடிய சூழ்நிலைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதுயதும் அவசியமாகும். இந்த விடயம் தொடர்பில் மேற்படி ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும். ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம்...
தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்...
அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் அவசர சந்திப்பை மேற்கொண்ட கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன்!

எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை ...
எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் – அமைச்சர் ...
தடுத்து வைக்கப்படிருந்த கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!