இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!.
Monday, October 2nd, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த அவர்களும் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின்போது மீன்பிடிக்கூட்டுத்தாபனம் முன்னெடுக்கும் வியாபார நடவடிக்கைகள் மற்றும் ஊக்குவிப்புச் செய்து கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் இரு செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க அவர்களுடன் அமைச்சு வேலைகளின் முன்னேற்றங்கள் மற்றும் விரைவாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ். மாட்டின் குருமடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம...
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு!
தனியார் தொழில் முயற்சியாளர்களினால் பள்ளிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தை சம்...
|
|
|


