இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழகம் கோரிக்கை – நிராகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஸ்ணனிடம் தொலைபேசி உரையாடலின்போதே இந்த விடயத்தை தாம் நிராகரித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த உரையாலின்போது இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை, குறிப்பிட்ட காலத்திற்கு இலங்கை கடற்பகுதியில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, தமிழக கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடலுக்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என தமிழக அரசாங்கம் உறுதியளித்த பின்னரே மீன்பிடி விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் என்றும் டக்ள்ஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்திய – இலங்கை மீன்பிடி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கோரிக்கைக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இலங்கைக் கடலுக்குள் நுழைந்ததற்காக 88 இந்திய மீன்பிடியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 12 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மீள்குடியேற்ற இடங்களிலும் உப தபாலகங்கள் அமைக்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் வலியுறுத்து!
வடக்கில் மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக் கார...
கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள்...