இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் வருகின்றது திருத்தம் – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
Friday, October 1st, 2021
சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.
தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
களுத்துறை சிறை தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
கிழக்கு மாகாணத்திற்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
|
|
|


