இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே நல்லெண்ணம் குறித்த தொலைபேசி உரையாடல்!

Friday, May 15th, 2020

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடையே  இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம் குறித்து தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடல் இன்றையதினம் நடைபெற்றது.

குறித்த உரையாடலின்போது  சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன் எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியாவின் நல்லெண்ணம் மேலும் வலுப்பெறும் என்றும் புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவரோடு இணைந்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தேவையான இந்திய உதவிகளை பெற்றுக்கொள்வதில் கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தூதுவர் கோபால் பால்கே அவர்களின் கருத்து ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதே நேரம் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் கோபால் பால்கே அவர்களை தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவ...
ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவு தினத்தினம் இன்...