ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவு தினத்தினம் இன்று – நினைவுகூரும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் கலந்து சிறப்பிப்பு!

Wednesday, June 5th, 2024

ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில் அவரது உருவச் சிலைக்கு   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈகச் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் மக்களின் கெளரவமான அரசியல் உரிமைகளுடன் வாழ்விற்காக உழைத்து உயிர் தியாகம் செய்த தியாகி பொன். சிவகுமாரனின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மறுவன்புலவு சச்சிதானந்தம் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வு,  நித்தியானந்தன், சி.தவராசா, கோவை நந்தன் ஆகியோரின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அடிப்படை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் - டக்ளஸ் எம்.பி.யிடம் புதுக்க...
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - எல்லை தாண்டும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சியளிக்க...