இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்திற்கு எதிர்வரும் திங்களுக்குள் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Thursday, March 4th, 2021
இரணைதீவில் கொரோனாவால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சாதகமான முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
தற்போது எழந்துள்ள இந்த விடயம் குறித்த நான் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் கதைத்திருக்கின்றேன்.
அத்துடன் சுகாதார அமைச்சரும் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் நான் கதைத்தது தொடர்பாக என்னிடம் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இதன்போது அந்த இடம் புதைப்பதற்கு பொருத்தமானதாக இல்லை என்ற முடிவை அவரிடம் நான் கூறினேன்.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் இலங்கைக்கு வருவாய் கிடைக்க கூடிய வகையில், குறிப்பாக ஒரு வருடத்திற்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற ரீதியில் வருடாந்த வருமானத்தை ஈஆட்டித்தரக்கூடிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.அதைவிட இன்னும் பல திட்டங்கள் அங்கு மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
ஆகையினால் இத்திட்டத்தை மாற்றியமைக்குமாறு கோரியதுடன் வேறு சில தீவுகளை இதற்காக அடையாளப்படுத்தியும் இருக்கின்றேன்.
இதற்கான தீர்வு இன்றோ நாளையோ அல்லது எதிர்வருகின்ற திங்கட்கிழமையோ அமைச்சரவையிலிருந்து கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிபபிடத்தக்கது.
Related posts:
|
|
|


