இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் சந்தோஸ் ஜா – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – இந்தியா- இலங்கை இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் குறித்து ஆராய்வு!
Monday, February 26th, 2024
இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் சந்தோஸ் ஜாவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் விசேட சந்திப்பு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியா- இலங்கை இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் குறித்தும் கடற்றொழிலாளர்களின் நலன்சார்ந்து மனிதாபிமான முறையில் கடற்றொழிலாளர் பிரச்சினையை அணுகுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாணத்தில் இந்தியாவால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்திய தூதுவரின் அழைப்பினைத் தொடர்ந்து குறித்த சந்திப்பு நேற்றையதினம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


