கொழும்புப் பல்கலையில் தமிழ் துறை இல்லாமை தேசிய கௌரவத்திற்கு பாதிப்பாக இருப்பதாகவே நான் கருது கின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 21st, 2017

தேசிய நல்லிணக்கம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுகின்ற அரச தரப்பிலிருந்தும் பல்துறைகள் சார்ந்தும் அவதானித்து, செயற்படுத்தக்கூடிய அடிப்படை அம்சங்கள் பலவுண்டு. இந்த கட்டமைப்புகளை வலுவுள்ளதாக உருவாக்காமல், தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேசுவது சாத்தியமற்ற நிலைப்பாடாகவே அமையும் என்பதை உறுதியிட்டுக் கூற முடியும்.

அந்த வகையில், பல்கலைக்கழக மட்டத்தில் இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சில விடயங்களை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டின் முதலாவது பல்கலைக்கழகமான கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதுகால வரையிலும் தமிழ்த்துறை  ஒன்று இல்லாத நிலையே காணப்படுகின்றது. தமிழ்த்துறை ஏன், தமிழ் பாடத்திற்கான விரிவுரையாளர்கூட இல்லாத நிலையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக தமிழ் மொழி மூலமாக சமூகவியல் கற்றும் அதில் சிறப்பு கலையில் பட்டம் பெற இயலாத நிலையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இவ்வியடம் தொடர்பில் விஸ்வா வர்ணபால அவர்கள் உயர் கல்வி அமைச்சராக இருந்தபோது நான் அவரது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். எனது கோரிக்கை அப்போது ஏற்கப்பட்டும் இதுவரையில் செயல்வடிவம் கொடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. மேற்படி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலமாக புவியியல், பொருளியல், வரலாறு, சமூகவியல், அரச அறிவியல் போன்ற கற்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையிலேயே இந்த நிலையும் காணப்படுவது தேசிய நல்லிணக்கத்திற்கு மாத்திரமல்ல தேசிய கௌரவத்திற்கே பாதிப்பாக இருப்பதாகவே நான் கருதுகின்றேன் –  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

Untitled-4 copy

Related posts: