இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, December 14th, 2019


பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் எதிர்காலம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவதற்கு கடற்றொழலில் நீரவ வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(14.12.2019) பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்த கௌரவ அமைச்சர் அவர்கள் குறித்;த உறுதியை வழங்கியுள்ளார்.


கடந்த கால ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஜனாதிபதி தேர்தலுதக்கான திகதி அறிவிக்கப்பட்ட காலப் பகுதியில் வடக்கு கிழக்கை சேர்ந்த சுமார் 2500 பேர் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் 7500 பேர் பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.


எனினும், குறித்த நியமனங்கள் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்த அனைத்து நியமனங்களும் இடை நிறுத்தப்பட்டன.


இந்நிலையில், தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடாமையினால் தாம் நிர்க்கதி நிலையில் இருப்பதாக குறித்த பிரதிநிதிகள் கௌரவ அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.


இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக எந்தவொரு விடயத்தையும் ஆணித்தரமாக பேச முடியாமல் இருப்பதாகவும், எனினும், அமைச்சரவையில் குறித்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எடுத்துரைத்து சிறந்த தீர்வினை பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts:

நில மெஹெவர திட்டத்தின் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பு இடம்பெற்றதா? நாடாளுமன்...
கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் - வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்ச...
வெல்லமன்கட மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு - பிரதேச மக்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸ்...