இடர்பட்ட எமது மக்களின் வாழ்வை புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும்  – முல்லைத்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 5th, 2017

இடர்பட்ட எமது மக்களின் வாழ்வை புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். என்பதுடன் அதற்கு மக்களது ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மற்றும் புதுமாத்தளன் பகுதிகளைச் சேர்ந்த  மக்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் மக்கள் தமது சொந்த  வாழ்விடங்களுக்கு திரும்பியுள்ள போதிலும் பலர் தமது சொந்த இடங்களுக்கு மீளவம் திரும்ப முடியாத அவலநிலை காணப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது  புதிய ஆட்சி மாற்றத்திற்காக மக்களிடம் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்னர் நடைபெற்றிரந்த பொதுத் தேர்தலிலும் மக்களிடம் சென்று பல்வேறு நடைமுறைச் சாத்தியமாகாத விடயங்களை வாக்குறதிகளாக வழங்கி இருந்தனர்.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம், உரிமை என பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் மக்களின் வாக்குகளை அபகரித்து வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற குழுக்களிக் பிரதித் தலைவர் ,மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் இணைத் தலைமை என பல்வேறு உயர் பதவிகளையும் பெற்றுள்ளார்கள் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட உயர் பதவிகளைக் கொண்டு தமது சுகபோக வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.

எதிர்காலங்களிலும் அதே சுயநல சுயலாக அரசியல்வாதிகள் நடைமுறைச் சாத்தியமாகாத வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை அபகரிக்க காத்திருக்கின்றார்கள். எனவே இதுவிடயத்தில் மக்களாகிய நீங்கள் தெளிவுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதனிடையே மக்களின் தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

சீவரத்தினம் இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்(கிருபன்) ,யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:

வாக்குகளால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் வாக்களித்த மக்களுக்கு என்ன செய்தார்கள்?-டக்ளஸ் தேவானந்தா கேள்வி...
அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது - நாடாளுமன்ற...
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!