அரச வேலை வாய்ப்புகளுக்களில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, May 31st, 2021

வடபிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவுகின்ற வெற்றிடங்கள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்த போதே மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து  கூட்டுறவு சங்கத்தில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்பி வடபகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்பை வழங்குமாறும் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறும்  கோரிக்கை முன்வைத்தனர்.

மேற்படி விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொளண்டு தருவதாக அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


கோம்பயன்மணல் இந்து மயானத்தில் யாழ்-போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் எரியூட்டி - ச...
கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள் - மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப...
மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்...