அரசியல்பலத்தை மக்கள் வழங்கினால் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Friday, June 19th, 2020
அரசியல் பலத்தினை மக்கள் வழங்குவார்களாயின் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கின் பலாலி, வயாவிளான உட்பட்ட விடுவிக்கப்படாத பிரதேசங்களி்ன் மக்கள் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியாக அன்று மஹிந்த ராஜபக்ச இருந்தபோது 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கொடுத்தள்ளோம்.
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் எமது மக்களின் பூர்வீக நிலப்பரப்புகள் அனைத்தும் அவர்டகளிடம் சென்றடைய வேண்டும் என்பதே எமது நிரைலப்பாடு.
அந்தவகையில் வரவுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் குறிப்பாக இந்த வலி வடக்கு பகுதி மக்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்களாயின் நிச்சயமாக அவர்களது கோரிக்கைகள் மட்டுமல்லாது தமிழ் மக்களது அபிலாஷைகள் அனைத்தக்கும் தீர்வு கிட்டும் என்றார்.
Related posts:
|
|
|




