அரசியலுக்காக எதையும் நான் கூறுவதில்லை – மக்கள் நலன் சார்ந்தே அனைத்து செயற்பாடுகளும் அமையும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
Sunday, June 16th, 2024
சரியான திசைநோக்கி அணிதிரள்வின் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாத்தியமான வழிமுறையில் பயணிப்பவர்கள் பக்கம் மக்கள் அணி திரளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கடல்ற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாவட்ட கிராமிய கூட்டுறவு கடல்றொழிலாளர் சம்மேளனம் மற்றும் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
அரசியலுக்காக எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும்.. அதனடிப்படையில் வடக்கின் கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
எமது கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது
அதனை ராஜதந்திர ரீதியாக மட்டுமன்றி சட்டரீதியாகவும் எதிர்கொண்டு தடுக்க தயாராக இருக்கின்றோம். அதற்கான முனைப்புகளிலேயே தற்போதும் ஈடுபட்டு வருகிறோம்.
இதேநேரம் இந்தியாவினுடைய தடைக்காலம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் முடிவடைந்திருக்கிறது. இதனடிப்படையில் நேற்று சிழல படகுகள் சட்டவிரோதமாக உள்நுழைந்ததாக அறியக்கிடைத்துள்ளது. எனினும் அவர்களது எல்லைதாண்டலை தடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இதேநேரம் அண்மையில் ஜனாதிபதி இந்தியா சென்றபோது மீனவர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருடன் பேச்சுக்களை மேற்கொண்டிக்கிறார். அதேபோல இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் பேசியிருக்கிறார்.
வடமாகாண மீனவர்களுடைய இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


