அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
தமது அமைச்சில் இன்றையதினம் சுபநேரத்தில் குறித்த அமைச்சை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றிருந்தார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துகலாசாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த அமைச்சின் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன, மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்! ஸ்ரீ...
பனை நிதியம் வெற்றுத் திட்டம் : நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற அனுமதிகள் ஏனைய மாவட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் முறைக்கு பாதிப்பை ஏற...
|
|