அமைச்சர் தேவப்பெருமவின் மக்கள் சேவை பாராட்டுக்குரியது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, January 1st, 2019

தென்னிலங்கையிலிருந்து பிரதி அமைச்சர் ஒருவர் வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய கிணறுகள் சுத்திகரிப்பு பணிகளில் மூன்று நாட்களாக ஈடுபட்டிருந்தார். அதே நேரம் வடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுடன் உலா வருவதும் அமைச்சர்களுடன் நெருக்கமாக பழகுவதுமான காட்சிகள் தான் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றது.

அது ஒரு முன்னேற்றகரமான அல்லது மனதை நெகிழ வைக்கும் ஒரு நிகழ்ச்சியைத்தான் மகிந்த தேவப்பெரும செய்துள்ளார். மக்கள் சார்பில் என்னுடைய நன்றிகளையும் பாராட்டுகளையும் அவருக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேபோலத் தான் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் அதை தங்களுடைய ஒரு முன்னுதாரணமாக செயற்படவேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன் என்றார்.

ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களிடம் வழங்கி வைத்தபின் ஊடகவியலாளர்கள் தேவப்பெருமாவின் சேவை தொடர்பில் எழுப்பியிருந்த கேளிவிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்  நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலோசகர் தவராசா, கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜா, யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Untitled-1

IMG_20190101_133152  IMG_20190101_141405 IMG_20190101_132920 49515715_1833176670127039_1104436890112622592_n 49206191_285661315474758_6073813690530922496_n

Related posts:

மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்...
தரமுயர்த்தப்பட்டபோதும் மீண்டும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது - தீர்வு தாருங்கள் என புதிதாக உ...
'செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்' – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்ச...

காணிகள் விடுவிப்பு - எழுத்தளவில் - பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை! எமது மக்கள் குடியேற ஏ...
ஜீவனோபாய தொழிலை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் சாவற்கட்ட...
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – டக்ளஸ்...