அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு இடர்கால உலர் உணவுப்பொதி விநியோகம்!

Sunday, August 29th, 2021

கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு கொவிட்-19 இடர்காலத்தைச் சமாளிப்பதற்கு உதவும் வகையிலான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கௌதாரிமுனையைச் சேர்ந்த 137 குடும்பங்களுக்கும் தலா 3,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கௌதாரிமுனையில் பிரதேச மக்களினால் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கான ஆரம்ப முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒழுங்குபடுத்தபட்ட சுகத் இன்டர்நஷனல் நிறுவனத்தினர், குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

கௌதாரிமுனை விநாயகர் கடற்றொழிலாளர் சங்கத் தலைவரின் தலைமையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம், இந்த உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்.

சுகத் இன்டர்நகஷனல் நிறுவனத்தின் பிரதிநிதியான சுபாஷ் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் எடுத்துவரப்பட்டு, பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் கௌதாரிமுனை-பரமங்கிராய் கிராமசேவையாளர் ராஜகோபால் ஆகியோரின் பங்கேற்புடன் வழங்கிவைக்கப்பட்டன.

கௌதாரிமுனை, விநாசியோடை மற்றும் மண்ணித்தலை பகுதிகளில் தனித்தனியாக கொவிட் சுகாதார வழிமுறைகளின்படி இந்த உதவிப்பொருள் விநியோகம் செயயப்படடன.

கௌதாரிமுனை கிராமத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் வகையில், அந்தக் கிராமத்தின் விநாயகர் கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 52 கடற்றொழிலாளர்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை வழங்க ஏற்பாடு செய்த கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவினால் கடலட்டைப்பண்ணை அமைப்பதற்கான ஆரம்ப முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சுகத் இன்டர்நஷனல் நிறுவனத்தினர்,

தமது கடமைகளின் ஒரு பகுதியாக, கடற்றொழிலாளர் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, கௌதாரிமுனை பகுதி மக்கள் நெற்செய்கையை மேற்கொள்வதற்கு சுமார் 100 ஏக்கர் காணியை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன...
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தவருக்கு ஆழ்மன அஞ்சலி - ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்புச் ...
எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட...