கடல் அட்டை பண்ணைகளை அமைக்க தனியார் மூதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Saturday, February 12th, 2022

மன்னார், பள்ளிமுனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு இனப் பெருக்க நிலையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாணத்தில் சாத்தியமான பிரதேசங்களில் எல்லாம் பாரம்பரிய தொழில் முறைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாக வகையில் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி பிரதேசத்திற்கான  பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக் கருவிற்கு வலுவூட்டும் வகையில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்ற சுகந் இன்ரனேசனல் நிறுவனத்தினரால் பள்ளிமுனை கடலட்டை இனப் பெருக்க நிலையத்தினை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடலட்டைப் பண்ணை மற்றும் கடலட்டை குஞ்சு இனப் பெருக்க நிலையம் போன்றவற்றினை அமைப்பதற்கு மேலும் பல தனியார் மூதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

சுகந் இன்ரனேசனல் நிறுவனத்தினால் மன்னார், பள்ளிமுனையில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.000

Related posts:

நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
இராஜதந்திர பணிகளில் தமிழர் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்...
நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எ...

புங்குடுதீவு பாடசாலை மாணவி கேஷனாவின் மரணத்திற்கு வடக்கு மாகாணசபையே பொறுப்புக் கூறவேண்டும் - டக்ளஸ் எ...
எமது மக்கள் முழுமையான சுதந்திரம்பெற தமிழ்த் தலைமைகள் நியாயமாக உழைக்கவில்லை- டக்ளஸ் தேவானந்தா அவர்களத...
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புக் கடன் தொகையை  பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரி...