அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – 15 வருடகால கனவை நனவாக்கிய கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள்!

……
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்கு செல்லும் பிரதான பாதையை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
முன்பதாக பாடசாலையின் மைதானத்திற்கான பிரதான பாதையில் அமைந்துள்ள இராணுவ முகாம் மாணவர்களின் மைதானச் செயற்பாடுகளுக்கு அசௌகரியமாக இருப்பதாக பாடசாலை சமூகத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
குறித்த கோரிக்கை தொடர்பாக அமைச்சர் முன்னெடுத்த தொடர் நடவடிக்கையின் பயனாக, இராணுவ முகாமின் ஒரு பகுதியை விடுவித்து மைதானத்திற்கான பாதையை வழங்குவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தினரால் விடுவிக்கப்படவுள்ள பகுதியை இன்று பார்வையிட்டச் சென்ற அமைச்சரை வரவேற்ற, குறித்த பகுதிக்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெவர்த்தன, சம்மந்தப்பட்ட பகுதிகளை அமைச்சருக்கு காண்பித்தார்.
இதன் மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களின் 15 வருட கனவு நிறைவேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|