அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அகவைநாள் இன்று – சர்வ மதங்களின் தலைவர்கள் ஆசீர்வாதம்..!
Friday, November 10th, 2023
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் 66 ஆவது பிறந்த தினமான இன்று (10.11.2023) காலை சர்வமதத் தலைவர்கள் அமைச்சரை வாழ்த்தி ஆசீர்வாதம் வழங்கினர்.
இந்நிகழ்வில் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, வண. கலகம தர்மரங்ஸி தேரர், அருட்தந்தை நிசான்குரே, மாளிகாவத்தை பள்ளிவாசல் மௌலவி முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.
அமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த ஆசீர்வாத நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்புடன் செயற்படும் சிறந்த அரசியல் தலைவராவார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பாரிய சேவையை ஆற்றிய தலைவர். பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வைக் காண வேண்டும் என்பதில் அமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
அமைச்சரின் பிறந்தநாளான இன்று சகல இன மக்களினதும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதுடன் மக்களுக்கான அமைச்சரின் சேவைகள் மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருளையும் கீர்த்தியையும் கொடுக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் வண. கலகம தர்மரங்ஸி தேரர், கடற்றொழில் அமைச்சரை நீண்டகாலமாக நன்கறிவேன். நாட்டின் தேசிய நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்தி விடயங்களில் பாரிய சேவையாற்றிய தலைவர் என்றும் அமைச்சரின் பிறந்தநாளில் சகல இனத்தினதும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்றார்.
அருட்தந்தை நிசான்குரே, மாளிகாவத்தை பள்ளிவாசல் மௌலவி முஸம்மில் ஆகியோர் அமைச்சரின் பிறந்தநாளுக்கு தமது சமயங்களின் சார்பாக வாழ்த்தியதுடன் அமைச்சர் ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்த தலைவரல்ல, முழு நாட்டு சிறந்த தலைவராக இருக்கிறார் என ஆசீர்வதித்து உரையாற்றினர்.
000
Related posts:
|
|
|


