அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!
Sunday, November 27th, 2022
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் அவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. –
முன்பதாக சீன அரசாங்கத்தினால் இலங்கையில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் என அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த 9,000 மெற்றிக்தொன் டீசலை ஏற்றிய கப்பல் நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் அதனை சம்பிரதாயபூர்வமாக பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு துறைமுகத்திற்கு சென்றிருந்தார்.
Related posts:
உதிரிக் கட்சி என்று எம்மை கூறியவர்கள் இன்று உதிர்ந்துபோனார்கள் - டக்ளஸ் தேவானந்தா!
வடக்கு - கிழக்கில் போதுமான தாதியர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...
|
|
|


