அமெரிக்க தூதரகத்தின் அரசியல் செயலாளர் கெலி, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு.
Thursday, May 12th, 2016
வடக்கு கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்கக்கூடியவகையில் அமெரிக்கா உதவி செய்ய முன்வர வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் முதன்மைச் செயலாளர். கெலியிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கைவிடுத்தார்.
இன்று காலை கொழும்பு லெயாட்ஸ் வீதியில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்திக்க வந்திருந்த கெலியுடனான சந்திப்பின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பின்போது, சமகால அரசியல் சூழ் நிலைகள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வு, தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் மீண்டும் கைது செய்யப்படுவது, தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம், மற்றும் பத்து தமிழ் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அமெரிக்க தூதரகத்தின் அரசியல் முதன்மைச் செயலாளர் கெலி மற்றும் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஹென்ரி தமிஸா மற்றும் தூதரக ஒருங்கிணைப்பாளர் குரூஸ் ஆகியோரும், ஈ.பி.டி.பியின் சார்பில், செயலாளர் நாயகத்துடன், ஈபிடிபியின் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர், சி. தவராசா, உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


Related posts:
சம்பூர் மின் உற்பத்தி நிலையம் இணக்க அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? - ஈ. பி. டி. பி.
நிரந்தர நியமனம் தொடர்பில் தொண்டராசிரியர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப...
ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி - அமைச்சர் டக்ளஸ் தல...
|
|
|


