அப்பாவி மக்களை நினைவு கூருவதையோ அல்லது அவர்களுக்காக கஞ்சி பருகுவதை நான் ஒரு போதும் விமர்சிக்கப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Sunday, May 19th, 2024
அப்பாவி மக்களை நினைவு கூருவதையோ அல்லது அவர்களுக்காக கஞ்சி பருகுவதையோ நான் ஒரு போதும் விமர்சிக்கப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “மழைக் கால இருட்டானாலும் மந்தி கொப்பிழக்க பாயாது” என்பது போல, கொள்கைகளையும் வழிமுறைகளையும் கைவிட்டுப் போன வரலாறு ஈ.பி.டி.பி.க்கு கிடையாது, சிரட்டையில் கஞ்சி குடித்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல், நிஜமாய் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடிய வேளையே அவர் விடயத்தை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் –
போராட்டங்களின் பெயரால் மரணித்த அப்பாவி மக்களை நினைவு கூருவதையோ அல்லது அவர்களுக்காக கஞ்சி பருகுவதை நான் ஒரு போதும் விமர்சிக்கப் போவதில்லை.
ஆனால் அரசியல் ஆதாயத்திற்காகவும் புலம்பெயர் நிதிக்காகவும், தெருத் தெருவாக கஞ்சி ஊத்தும் போலி அரசியல் தரப்பினரை தான் அடியோடு வெறுப்பதோடு, இவ்வாறானவர்களை மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்தி மக்களை விழிப்படைய செய்யும் வகையில் செயற்பாடு அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


