அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” – நனோ நீர் சுத்திகரிப்பு மையம் கிளிநொச்சியில் அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் பிரசன்ன ஆகியோரால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

Saturday, April 6th, 2024

நனோ தொழில்நுட்பத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நீர்வழங்கல் அமைச்சின் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 23 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழான செல்வாநகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட செல்வச்செழிப்பு நீர்பாவனையாளர் சங்கத்திற்கான நனோ நீர் சுத்திகரிப்பு மையம் இன்றையதினம் மக்களின் பாவனைக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர்ந்த கிராமங்களின் நீர் வையை கருத்திற்கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நீர்வழங்கல் அமைச்சின் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் அமைச்சர்களுடன்  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்ஆனந்த  கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.S.முரளிதரன்,திட்டமிடல் பணிப்பாளர்.ஸ்ரீபாஸ்கரன், கரைச்சி பிரதேச செயலர் .முகுந்தன்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் இரட்ணம் அமீன் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மதிவதனன் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு குழு அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள்,பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: