அனுராதபுரம் மொரவெவ கிராம மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்! நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017

மொரவெவ கிராமத்தின் நீர்ப்பாசனக் குளங்களையும், கால்வாய்களையும் புனரமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்துப்பதடன் அம் மக்களது அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அனுராதபுர மாவட்டத்தின் எல்லைக் கிராமமான மொரவெவ கிராமத்தில் வசித்துவந்த மக்கள், பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக கடந்த 1994ம் ஆண்டு அக் கிராமத்தைவிட்டு வெளியேறி, அல்மிட்டிகல எனும் கிராமத்தில்  வாழ்ந்துவந்து,  தற்போது தங்களது சொந்த கிராமமான மொரவெவ கிராமத்திற்கு திரும்பியுள்ள நிலையில், அம் மக்கள் அங்கு குடியேறி தங்களது வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்கு அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

சமார் 23 வருடங்களாக இடம்பெயர்ந்து, பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில் பொருளாதார வசதிகளை எதையும்  கொண்டிராத சுமார் 42 விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இம் மக்கள், தாங்கள் மேற்படி கிராமத்தில் வாழும் வகையில் தங்களது ஜீவனோபாய தொழிற்துறையான விவசாயத்தை மேற்கொள்வதற்கு அங்குள்ள நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைத்துத் தருமாறு கோருகின்றனர்.

இம் மக்களுக்கு வீடுகள் உட்பட மேலும் பல்வேறு அடிப்படைத் தேவைகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது. எனினும், முதற்கட்டமாக மேற்படி குளங்களையும், கால்வாய்களையும் புனரமைப்புச் செய்து கொடுத்தால் தங்களால் விவசாய செய்கையில் ஈடுபட்டு, தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இம் மக்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்படி மக்களது முக்கிய கோரிக்கையான மொரவெவ கிராமத்தின் நீர்ப்பாசனக் குளங்களையும், கால்வாய்களையும் புனரமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா?

மேலும், அம் மக்களது அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

parliament-new1 copy

Related posts:


இந்தியக் கடற்றொழிலாளர்களின் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரத்தை அனுமதிக்க கூடாது - அமைச்சர் டகளஸிற்கு ...
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப...
நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!