அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, July 14th, 2023

நாரா நிறுவனத்தினால் அனுமதிக்கப்படாத பிரதேசங்களில்  மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், உள்ளூர் இழுவைப் படகுகளினால் பாதிப்பு ஏற்படுவதாக பிரதேச கடற்றொழிலாளர்கள் முறையிட்ட நிலையிலேயே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட சேற்று நிலப் பகுதிகளில் மாத்திரம் மீன்ப் பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு உள்ளூர் இழுவைப் படகுகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம் வனத்துறைக்கு சொந்தம் என்றால் மக்கள் எங்கே குடியிருப்பது? - நாடாளுமன்...
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஊர்காவற்றுறை மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
வடக்கின் குடிநீர் பிரச்சினையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை! யப்பான் அமைச்சரிடம் கோரிக்கை முன்...