அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் “வந்தபின் காப்போம்” என்றிராது “வருமுன் காப்போம்” என்றிருக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, April 1st, 2019

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பது “வந்தபின் காப்போம்” என்ற நிலையில் இருக்காமல், “வருமுன் காப்போம்” என்ற நிலையில் எப்போதும் இருக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டிலே குறிப்பாக மழை காலங்கள் – வறட்சி காலங்கள் தொடர்பில் முன்கூட்டியே அறியக் கூடியதாக இருக்கின்றது. அத்தகைய காலங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பிலான வரலாற்றுப் பாடங்களும் இருக்கின்றன. ஆகவே, மீளவும் அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னரே மக்களை அதிலிருந்து மீட்கப் பேராட வேண்டும் என்ற நிலைமை இல்லாமல் மக்களை அதிலிருந்து முன்கூட்டியே பாதுகாப்பதற்கான ஆயத்தங்களை இந்த அமைச்சு கொண்டிருக்க வேண்டும்.

இப்போது குறிப்பாக இந்த நாட்டிலே வெப்ப நிலை அதிகரித்துள்ளது வடக்கிலே வெப்ப நிலை மிக அதிகமான பாதிப்புகளை எமது மக்களுக்கு கொண்டு தருக்கின்றது. இந்த வறட்சி நிலையிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக – குறைந்தபட்சமாக குடிநீருக்கான வசதிகளையாவது மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

குடிநீருக்கான பவுசர்களைக் கொடுத்துள்ளோம் எனக் கூறிக்கொண்டு நீங்கள் இருந்தாலும், அந்த பவுசர்களில் விநியோகிப்பதற்கு வடக்கிலே குடிநீர் இருக்க வேண்டும். குடிநீருக்கே பாரிய தட்டுப்பாடுகள் அங்கே நிலவுகின்றன.

ஆகவே வடக்கில் மட்டுமல்ல, இன்று குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீருக்கான உத்தரவாதம் முன்கூட்டியே இருக்கின்றதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்ற செயற்பாடுகளையும் இந்த அமைச்சு ஆராய்ந்திருக்க வேண்டும்.

அதேபோன்று மழை காலங்களில், மழை நீர் சேமிக்கப்படக்கூடிய வகையிலான ஏற்பாடுகள், வழிந்து செல்லக்கூடிய வசதிகள், மண் சரிவுகள் ஏற்படக்கூடிய அபாய இடங்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டங்கள் குறித்த முன்கூட்டிய ஆய்வுகள் இருக்க வேண்டும்.

இன்று இந்த நாட்டில் பொது மக்களின் தேவைகளை அதிக அக்கறையுடன் கவனித்து, அவற்றுக்கு உடனுக்குடன் உதவுகின்ற வகையில் ஊடக நிறுவனங்கள் பல செயற்பட்டு வருகின்றன.

மழை, வெள்ளம் வந்தால் ஓடிச் சென்று மக்களுக்குத்; தேவையான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் இந்த ஊடக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன. நாடளாவிய ரீதியில் மரங்களை நடுகின்றன. கடற்கரைகளை சுத்தஞ் செய்கின்றன. இருதய நோயாளிகளை பராமரிக்கின்றன. சுத்தமான குடிநீருக்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றன. இதில் ஒன்றையேனும் ஒரு நாட்டின் அரசாங்கத்தால் ஒழுங்குற செய்ய முடியவில்லை என்றால், அதைவிட மோசமான நிலைமை வேறு என்ன இருக்கின்றது? 

Related posts:

அரசியல் கைதிகளின் உணர்வுகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான் - விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன்...
தீமையிலும் நன்மை காண்போம் - அசாதாரண சூழலையும் வெற்றி கொள்வோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!
தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் கிராமங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜய...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
இலங்கை கடற் பரப்பிற்குள் வரும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில...
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ் மாவட்டத்தில் ஆரம்பி...