அனர்த்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டுக்கும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி தீவிரம்!

Thursday, December 3rd, 2020

புரெவி புயல் ஏற்படுத்திய தாக்கங்களில் இருந்து மக்களை மீட்டெடுங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரருமான டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இன்று காலை தொடக்கம் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அனர்த்தம் ஏற்பட்;ட பிரதேசங்களில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் முப்படையினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளில் ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் ஈடுப்ட்டுள்ளனர்.

அதைவிட, யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. இன் ஆளுகைக்குள் காணப்படும் வேலைணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு ஆகிய பிரதேச சபை எல்லைக்குட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இன்று காலையில் நேரடியாக விஜயம் செய்த பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தேவையேற்பட்ட மக்களை பாதுகாப்பான பொது இடங்களில் தங்க வைத்து சமைத்த உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரச நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டதுடன் பாதிப்புக்கள் தொடர்பாக மதிப்பீடுகளை மேற்கொள்தற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதேபோன்று வடமாரட்சி, தென்மாராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டடுள்ளன. அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகா...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...
அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் - ஊர்காவற்றுறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமை...

எமது வாழ்வே கேள்விக்குறியான போது அதனைப் பாதுகாத்து  நம்பிக்கையூட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - எ...
அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தாருங்கள் - டக்ளஸ் எம்பியிடம் மன்னார் நடுக்குடா பகுதி மக்கள்...
மீன்பிடித் துறைமுகங்களில் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது 24 மணிநேர தகவல் பரிமாற்றச் சேவை - அமைச்ச...