அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு – துரிதப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும் நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் இன்று கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச் சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக பிரஸ்தாபித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
ஈழப் போராட்ட வரலாற்றில் வித்தான முதல் பெண் போராளி தோழர் சோபாவுக்கு அஞ்சலி மரியாதை!
எமது மக்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொன்னான வாய்ப்பு இது – அமைச்சர் டக்...
|
|
நானாட்டான் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றலில் முறைகேடு - நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோ...
இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...
கடலட்டை பண்ணைகளின் உருவாக்கத்தினால் புத்தொழிச்சி பெறும் கிராஞ்சி – இன்றும் அமைச்சர் டக்ளஸினால் 56 பய...