ஈழப் போராட்ட வரலாற்றில் வித்தான முதல் பெண் போராளி தோழர் சோபாவுக்கு அஞ்சலி மரியாதை!

Thursday, May 3rd, 2018

ஈழப் போராட்ட வரலாற்றில் முதல் வீரகாவியமான தோழர் சோபா மதிவதனியின் 33 ஆவது நினைவுதினம் இன்றாகும்.

தமிழர் உரிமைக்காக ஈழப்போராட்டம் உருவான வரலாற்றில் யுத்த களத்தில் முதல் வித்தான பெண் போராளியாக சோபா  என்று அழைக்கப்படும் மதிவதனி விளங்குகின்றார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரியான சோபா 1985 ஆண்டு வைகாசி மாதம் 03 ஆம் திகதி, அன்றைய ஈ.பி.ஆர்.எல் எவ் அமைப்பின் போராளியாக இருந்து காரைநகர் கடற்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் முதல் களப்பலியான பெண் போராளியாக விளங்குகிறார்.

எமது மண்ணின் விடிவுக்காக பெண்களது எழுச்சிக்கு வித்திட்டுச் சென்று களப்பலியான முதல் பெண் போராளியான தோழர் சோபா தமிழர் தேசமெங்கும் நினைவு கூரப்படவேண்டியவராவார்.

எமது ஆரம்பகால நீதியான விடுதலைபோராட்டத்தில் களத்தில் ஆகுதியான முதல் பெண் போராளிக்கும் அவருடன் அன்றை தாக்குதலில் வீரகாவியமான சக போராளிகளுக்கும் என்றும் நாம் அஞ்சலி மரியாதை செலுத்துவோம்.

Related posts:

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
சகல மக்களின் உரிமைகள் வெல்லவும் சமகால இடர்கள் நீங்கவும் உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் - மே தின ...
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு, அபிவிருத்தி செய்யப்படும் - அமைச்ச...

நந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகார...
அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ் தலைமைகளுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு...
சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பி. கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகினறன - அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!