அதிகாரங்கள் போதியளவில் இன்மையால் மக்கள் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுகின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிபிப்பு!

Thursday, October 26th, 2023


…….
அதிகாரங்கள் போதியளவில் இல்லாத காரணத்தினால் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போலித் தேசியத்திற்காக வீராப்பு பேசுகின்றவர்களின் கரங்களை மக்கள் தொடர்ந்து பலப்படுத்துவது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் அலுவகத்திற்கு வருகை தந்த தென்மாராட்சி பிரதேச சமூக அமைப்புக்களின் மத்தியில் கருத்துக்களை பகிர்ந்த போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்மாராட்சி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 2

Related posts: