அடையாள உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் டக்ளஸ் தேவானந்தா!

இந்தியாவின் கர்நாடகாவில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குளிர்பானம் வழங்கி முடித்துவைத்தார்.
யாழ். இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலை 4 மணிக்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
முன்பதாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ டக்ளஸ் தேவானந்தா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுக்களை மேற்கொண்டதை அடுத்து யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சகிதம் உண்ணாவிரதிகளுக்கு குளிர்பானம் வழங்கினார்.
இதனையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்த அதேவேளை உண்ணாவிரதிகளால் இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அங்கு கருத்துத் தெரிவித்த உண்ணாவிரதிகள் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் நீண்ட காலமாக பங்கெடுத்து வரும் தமிழக மக்கள் தாக்கப்பட்டமையை எதிர்த்தே, இந்தப் போராட்டத்தை தாம் முன்னெடுத்ததாக தெரிவித்திருந்தனர்
இதனிடையே தமிழக மக்களது பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தை யாழ்ப்பாணத்தின் தமிழ் அரசியல் கட்சிகள் எதுவும் கண்டுகொள்ளாதிருந்த நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதில் அதிக அக்கறைகொண்டு செயற்பட்டதாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்த உண்ணாவிரதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
Related posts:
|
|