நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,….. நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!

Monday, January 29th, 2018

நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,…..

நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!

வர்த்தகம் இல்லையென்றால் மக்களின் இயல்பு வாழ்வு ஸ்தம்பிதம்!

வர்த்தக சேவை என்பது உங்கள் உழைப்பு மட்டுமல்ல, எமது மக்களின் அத்தியாவசிய தேவையும் அதுவே!

ஆனாலும், எமது மக்களைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கும் நீங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் ஏராளம் என்பதை நான் அறிவேன்.

நான் உங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பவன். உங்கள் பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காணும் விருப்பம் உடையவன்.

இன்று தேர்தல் ஒன்று உங்களைத் தேடி வருகின்றது.

எந்தக் கட்சியினர் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்தவர்களோ, அவர்களையே நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

இது உங்கள் வரலாற்று வாழ்விடம். நீங்களே இங்கு வர்த்தகத்தின் உரிமையாளர்கள்.

கடந்த காலங்களிலும் உங்கள் தேவை கருதி நான் சாணக்கியமாக பல விடயங்களை சாதித்துக் காட்டியிருக்கிறேன். அதே வழிமுறையையே இனியும் தொடர்வேன்!

உங்களைத் தேடி வரும் நுகர்வோரின் தொகை பெருகி வரவேண்டும்! ஆனாலும், எமது மக்களிடம் நுகர்வுத் தேவைகள் இருந்தும், பணப்புழக்கம் குறைவடைந்துள்ளது.

இந்த நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முகமாக, எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கியும்,

செயற்படாதிருக்கும் எமது தொழிற்துறைகளை மீள செயற்படுத்தியும், புதிய தொழிற்துறைகளை நவீன தேவைகளுக்கேற்ப நிறுவியும்,

வளங்கள் நிறைந்த எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தும்,

எமது மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதன் மூலமாக, இந்த நிலைமையை நிச்சயமாக நான் மாற்றுவேன்!

நீங்கள் செலுத்தும் வர்த்தக வரிகளை நியாயமான வகையில் குறைப்பதற்கும்,

உங்களது தேவைகளுக்கான முழுமையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், உங்கள் தேவைகளுக்காக குறைந்த வட்டியில் இலகு வங்கிக் கடன்களை பெற்றிடவும், நான் வழி சமைத்து தருவேன்.

உங்கள் வர்த்தகத்துறையில் நவீன தொழில் நுட்பங்களை நீங்களே விரும்பியபடி உருவாக்கித் தருவேன்.

அதே நேரம், உங்கள் வர்த்தக துறையை பின்பற்றி இளைய சமுதாயத்திலிருந்தும், உங்கள் வழி நோக்கி விரும்பியோர் வர வேண்டும். அதற்கான பயிற்சி பட்டறைகளை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன்.

நீங்கள் இதுவரை பெற்ற கடன்களில் இருந்து மீண்டு வர, உங்களுடன் ஆலோசித்து தீர்க்கமான ஒரு முடிவெடுப்பேன்.

அத்துடன், உங்களது வர்த்தக நடவடிக்கைளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு கைகொடுத்து உதவும் வகையில், வடக்கு மாகாணத்திற்கென யாழ் மாவட்டத்தில் புதிதாக தனி வங்கியொன்றினை உருவாக்கும் எண்ணமும் எனக்குண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அத்துடன், எனது நீண்ட நாள் கனவாகிய காங்கேசன்துறை துறைமுகத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்து, அதன் ஊடாக இந்தியாவிலிருந்து அத்தியாவசிய மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள், தொழில்சார் உபகரணங்கள், இலத்திரனியல் பொருட்கள் போன்ற அனைத்தையும் நேரடியாக யாழ் மண்ணுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். அத்தகைய நிலையில், எமது மக்களுக்குக் குறைந்த விலைகளில், தரமான பொருட்களை இலகுவாகப் பெறக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். தென் பகுதிக்கே பொருட்களை மொத்தமாக விநியோகிக்கக்கூடிய வாய்ப்பினை நீங்களே பெறுவதுடன், வடக்கு மாகாண சபைக்கென வருமானங்கள் அதிகரிக்கும். கூடியளவிலான வேலைவாய்ப்புகளை எமது மக்களுக்கென உருவாக்க முடியும். அத்துடன், எமது நாட்டுக்கான ஒரு பொதுச் சந்தைவாய்ப்பு உருவாகும்.

உள்@ராட்சி மன்றங்களும், மாகாண சபையும் ஒரு வண்டிலின் இரு சில்லுகளைப் போன்றன. எனவே, உள்@ராட்சி மன்றங்களைப் போன்றே, மாகாண சபை ஆட்சியையும் ஆற்றல், ஆளுமை, அக்கறை கொண்ட மக்கள் பணியாளர்களாகிய நாமே கைப்பற்றியாக வேண்டிய நிலை இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். வடக்கு மாகாண சபை ஆட்சி எம் வசம் இருந்திருக்குமானால், இன்று வடக்கு மாகாணத்தை அனைத்துத் துறைகள் சார்ந்தும் மேலும் நாம் முன்னேற்றியிருப்போம்!

எனவே, இந்த உள்@ராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் வெற்றியின் மூலமாக உங்களது வர்த்தகத்துறையின் முன்னேற்றத்திற்கும், வசதிகளுக்கும், எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் வெற்றியின் மூலமாக உங்களது வர்த்தகத்துறையின் பலமானதும், விரிவானதுமான வளர்ச்சிக்கும் வித்திட வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து, உங்களை நீங்களே பலப்படுத்திக் கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன்.

அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

அபிவிருத்தியில் நிமிர்ந்தெழும் தீர்வு!

அரசியலுரிமைக்கான நிரந்தரத் தீர்வு!

இவைகளே எனது உயிர்த் துடிப்பு!

சாதித்த எம் கரங்களை பலப்படுத்துங்கள்!

மேலும் சாதனை படைப்போம் நாளை!

அரசியல் பலத்தை எமது கரங்களில் நீங்கள் தந்தால்

அதன் மூலம் விடியலை நோக்கிய மாற்றத்தை

நாம் உருவாக்குவோம்!

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!

எக்காலத்திலும் பிரிக்கப்பட முடியாத

வடக்கு கிழக்கு எங்கள் தாயக பூமி!….

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வு!

என்றும் உங்கள் சேவையில்

டக்ளஸ் தேவானந்தா பா.உ

செயலாளர் நாயகம்,

Paper Add 3

Related posts: