தமிழ் பேசும் மக்களின் பார்வையில் மாற்று அரசியல் தலைமை ஒன்றே தேவை!

Tuesday, April 26th, 2016

அரசியல் அவதானிகளின் பார்வை இன்று மாற்று அரசியல் ஒன்றை நோக்கி திரும்பியிருக்கின்றது.

தமிழ் போசும் மக்களின்  அரசியல் உரிமை குறித்து இதுவரை எழுப்பப்பட்டுவந்த வெறும் அர்த்தமற்ற உணர்ச்சி கோசங்களை இனிமேலும் யாரும் நம்பத்தயாரில்லை.

இது மாற்றங்களுக்கு மாறாக ஏமாற்றங்களையே சாதாரண தமிழ் பேசும் குடிமக்களின் மனங்களில் ஆழப்பதிந்துள்ளது.

ஆகவே மாற்று அரசில் தலைமை ஒன்றிற்கான தேடலில் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களே தேடல் நடத்தவேண்டிய தேவை ஒன்று இன்று எழுந்தள்ளது.

அந்த மாற்று அரசியல் தலைமை யார் என்பது புரியாத புதிரல்ல. நீண்டகாலமாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியல் தளத்தில் நின்று நடைமுறை யதார்த்த வழியில் செயலாற்றிவரும்  ஈழமக்கள் ஜனநாயக கட்சிதான் என்பது வெளிப்படை உண்மை.

ஆனாலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி கொண்டிருக்கும் கொள்கைகளும் அதற்கான நடைமுறை யதார்த்த வழிமுறைகளும் மக்களை முழுமையாக சென்றடையமுடியாத குறைபாடு இங்கு நீடித்துவருகின்றது.

இதற்குக்காரணம் அந்தக்கட்சியின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் திட்டமிட்ட செயல்ப்பாடுகள் தான் என்பதில் ஐயமில்லை.

சுடர்விட்டு பிரகாசிக்கும் சூரியனை கார் மேகங்கள் மறைக்க எத்தனிப்பது போல் தமது கட்சியின் செயற்பாடுகள் மீது  கறை பூசி அவதூறு பரப்புவோர் குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி  எதையும் அலட்டிக்கொள்ளாது மன வைராக்கியத்துடன் இருப்பதாகவே பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

கடந்து போன வரலாற்றில் நடந்து வந்த பாதையில் எதிர்கொண்ட தடைகளை விடவும் இன்று ஈழமக்கள் ஜனநாயக கட்சி  எதிர்கொள்வது வெறும் சலசலப்புகள் மட்டுமே.

இந்தத் தடைகளைத்தாண்டி அரசியல் தளத்தில் முகமுயர்த்துவது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு  இலேசான காரியம்.

தடைதாண்டி வெளியே வாருங்கள் என்ற கோசங்களும் வேண்டுதல்களும் அந்தக்கட்சியின் தலைவர்  டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி எழுந்திருக்கும் மக்கள் குரல்கள் இன்று அதிகரித்துள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி தேசிய எழுச்சி மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானித்துள்ள இந்நிலையில்…..

தேசிய எழுச்சி மாநாட்டின் மூலம் தமக்கான பலமான ஒரு அரசியல் தலைமையை உருவாக்கி தரவேண்டும் என்றே தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஆகவே இனிவரும் காலங்கள் நல்ல கனிதரும் காலங்கள் என்ற நம்பிக்கையை இன்று தமிழ் பேசும் மக்களின் ஆழ் மனங்களில் விதையாக விதைத்துள்ளது.

அதற்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எதிர்பார்த்த வெற்றிகளை அடையுமென நம்பிக்கையுடன் சகலரும் காத்திருக்கலாம்.

நன்றி!

மறுபடியும் மறுமடலில்

சந்திப்போம்!…

Related posts: