மெல்லத்தமிழ் இனிச்சாகுமோ?

Friday, July 15th, 2016

சாவும் சாம்பல் மேடும் என இருந்த பேரவல  வாழ்வொரு காலம் இருந்தது. அது இன்று இல்லை.

ஆனாலும் எந்த மொழியுரிமையில் இருந்து  எமது உரிமைப்போராட்டம் தொடங்கியதோ அந்த மொழி மீதான கொலைகள் இன்னமும் தொடர்வதாகவே தெரிகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் சட்டமொன்று  நிறைவேற்றப்பட்டது. அது தகவல் உரிமைச்சட்டம் என்று நாடாளுமன்றம் அறிவித்திருந்தது.  தகவல் உரிமை சட்டம் என்றால் என்ன?

உங்களில் யாருக்காகாவது சட்டென்று புரிகிறதா? இல்லை என்றுதான் உங்களிடம் இருந்து பதில் வரும். ஆனாலும் தெற்கு மக்களிடம் இது குறித்து  விளக்கம் கேட்டால் எந்த பாமர சிங்கள குடிமகனும்  சட்டென்று பதில் சொல்லி விடுவான்.

காரணம்..  அது சிங்கள  மொழியில் சரிவர சொல்லப்பட்டிருக்கிறது. சிங்களத்தில் எழுதப்பட்டு தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது.  இச்சட்ட மூலம் எந்த கருப்பொருளை கொண்டிருக்கிறது?

அரசாங்கத்திடம்  திணைக்களங்களிடம் அல்லது  அலுவலகங்களிடம் பொது மக்கள் உரிய முறையில்  தமது நியாயமான கேள்விகளை கேட்க வேண்டும்.  இச்சட்ட மூலத்தின் மூலம் பொது மக்கள் தமது அடிப்படை உரிமைகளைபெற்றுக்கொள்ள வேண்டும்.

அரச நிர்வாக கட்டமைப்புகள் ஒவ்வொன்றிலும் பொது மக்கள்  அறிய முற்படும் தகவல்களை உரிய முறையில் வழங்குவதற்கான  ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.  இது அனைத்து மக்களினதும் அடிப்படை  உரிமை குறித்த விடயம்.

ஆகவே இதை தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்றுதான்  நாடாளுமன்றம் அறிவித்திருக்க வேண்டும். மாறாக தகவல் உரிமைச்சட்டம் என்று அரை குறையாக  அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  யாவரும் கண்களை மூடிக்கொண்டு இச்சட்ட மூலத்திற்கு ஆதரவகாவே வாக்களித்து விட்டு வந்திருக்கின்றனர்.  ஆனாலும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே  இது குறித்த நியாமான கேள்விகளை எழுப்பியபடி அதற்கு ஆதரவு வழங்கியிருக்கிறார்.

அது வேறு யாருமல்ல. ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களே. சிங்களத்தில் சிந்தித்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்வதால்  அதில் உருவாகும் தவறான மொழி பெயர்ப்பை  தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை என்றும்.இது தகவல் உரிமை சட்டம் அல்ல.தகவல் அறியும் உரிமை சட்டம் என்பதே தமிழ் மக்களும் புரிந்து கொள்ள முடிந்த சரியான மொழிபெயர்ப்பு என்றும் நாடாளு மன்றத்தில் டக்ளஸ் தேவானானந்த அவர்கள் வாதாடியிருக்கிறார்.

இந்த விடயத்தை நாடாளுமன்றத்தின் குழு நிலை விவாதத்திற்கும் விரைவில் எடுக்கவுள்ளேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா அங்கு எடுத்துரைத்துள்ளார். தமிழ் மொழி பேசுவதற்கும் எழுதுவதற்கும்  வாசிப்பதற்கும் மட்டுமல்ல… தமிழ் மொழியானது சிந்திக்கும் மொழி என்ற உரிமையையும் கொண்டிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவான்னந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.

கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் பிழை! கண்ணை  மூடிகொண்டு  ஆதரிப்பதும் பிழை!! தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதை  புரிந்து கொண்டால் சரி! அவர்களுக்கு நல்ல புத்தி வர பிரார்த்திப்போம். வந்தால் வரவேற்போம்.

மெல்லத்தமிழ் இனிச்சாகுமோ?..     விடுவோமோ?…

மறுபடியும்

மறுமடலில் சந்திப்போம்…

நன்றி!….

Related posts: