வரம் கொடுக்கும் தெய்வத்தை வழி மறிக்கும் தரகர்கள்!….

Sunday, March 6th, 2016

தெய்வங்கள் வரம் கொடுத்தாலும்
தரகர்கள் குறுக்கேபடுத்துக்கிடந்து
வழி மறிக்கிறார்கள்.
கிடைப்பதையும் தடுத்துநிறுத்தி
இப்படிகெடுதல் செய்வதுநியாமோ?..
இதுவேஇன்றுஒவ்வொரு
தமிழ்குடி மக்களினதும் வீட்டு
வாசல்கள் தோறும் ஒலிக்கும் கேள்வி.
ஆட்சிமாற்றம் நடந்ததுஎன்னவோஉண்மைதான்.
ஆனாலும் மத்தியில் மட்டுமேஅது
மலர்ந்துமணம் வீசுகின்றது.
தமிழ் பேசும் மக்களின் வாரலாற்று
வாழ்விடங்களில் மாற்றங்கள் நடக்கவில்லை.
இது வெள்ளிடைமலையாகவேதெரிகிறது.
இதற்குயார்தான் பொறுப்பு?…
மத்தியில் மலர்ந்திருக்கும் அரசா?..
ஆட்சிமாற்றத்தைதாமேநடத்தினோம் என்று
மார் தட்டிதம்பட்டம் அடிக்கும்தமிழ் தரகர்களா?…
நூறுநாட்கள் வேலைத்திட்டத்தை
ஆட்சிமாற்றம் அறிவித்திருந்தது.
தென்னிலங்கைஅரசியல் தலைமைகளும்
முஸ்லிம் கட்சிதலைமைகளும்
தத்தமதுமக்களுக்குதருணம் பார்த்து
ஆற்றியபணிகள் ஏராளம்.

ஆனாலும்,அம்புதைத்தமான்களாக
அவலப்பெருங்காட்டில் மாய்ந்தொழிந்த
தமிழ் மக்களின் வாழ்விடங்களில்
ஒன்றும் நடக்கவில்லை.
இணங்கிஇரந்துவருந்திபெற்றெடுத்த
எதிர்க்கட்சிநாற்காலி,….
குழுக்களின் பிரதித்தலைவராக
ஏறிக்குந்தியசிம்மாசனம்,…..
அமைச்சுஅதிகாரங்கள் என்று
தமிழர் தரப்பில் பெரும் எடுப்பில்
பதவிப்பட்டாளங்களே இருந்தும்,….
தமிழ் மக்களின் வாசலுக்கு
விடிந்தவெள்ளிவெளிச்சமோ
வீசுதென்றலின் சுகந்தமோ
இன்னமும் வந்துசேரவில்லை.
வாக்குரிமைபெற்றதமிழ் மக்கள்
வாக்குறுதிகளைநம்பிவாக்களித்தனர்.
ஆனாலும் அவர்கள் வாழ்வுரிமை
பெற்றதாய் எதுவும் இல்லை.
அரசியல் பலத்தோடு இருப்பவர்கள்
எதிர்க்கட்சிநாற்காலிக்கும்,
பிரதிக்குழுக்களின் தலைவர் சிம்மாசனத்திற்கும்
மட்டுமேபேரம் பேசியிருக்கிறார்கள்.
மாறாக,.. தம்மைநம்பிவாக்களித்த
மக்களின் மீட்சிக்காகஅவர்கள்
என்னதான் பேரம் பேசினார்கள்?…
தேர்தல் விஞ்ஞாபனம் தெருவிலேகிடக்கிறது.
கொடுத்தவாக்குறுதிகள்காற்றிலேபறக்கிறது.
முன்னையஆட்சியில் கட்டிமுடித்த
கட்டிடங்களுக்கு இன்றுநாடாவெட்டி
திறப்புவிழாநடத்திநெஞ்சுநிமிர்த்துகிறார்கள்.
நிலமீட்பும் அப்படித்தான்,…..
அடுத்தவன் வளர்த்துவாரிக் கட்டியகொண்டைக்கு
இவர்கள் பூ மட்டும் சூட்டிஅதன் அழகிற்கு
உரிமைகோருகின்றார்கள்.
இன்றையஅரசைநீங்கள் கேட்டால்
இல்லைஎன்றாசொல்லப்போகிறது?…
எதற்கும் தயாராகவே இருப்பதாகதெரிகிறது!
கேளுங்கள் தரப்படும்,தட்டுங்கள் திறக்கப்படும்.
புதியஆட்சியும் பச்சைக்கொடிகாட்டுகிறது.
ஏன் நீங்கள் கேட்வில்லை?..
ஏன் அரசின் கதவுகளைதட்டவில்லை?..
கேட்டீர்,…கதவுதட்டினீர்,…..
அதுஉங்கள் சொந்தசலுகை.
கூட்டமைத்துகோலேச்சியவர்களின்
கூடாரமணிமண்டபங்கள்
மினுமினுத்துபளபளக்கின்றன.
நம்பிவாக்களித்தமக்கள்
நடுக்கடலில் தத்தளிக்கின்றனர்.
சொந்தமக்கள் துன்பத்தின் துவழ்வதுகண்டு
சிந்தைகலங்கி ஓர் நிமிடம் நின்றீரோ?…
அபிவிருத்திஎங்கே?..
வேலைவாய்ப்புஎங்கே?..
வறுமைஒழிப்புஎங்கே?..
வாழ்வாதாரவசதிகள் எங்கே?…
சிறைக்கைதிகளின் விடுதலைஎங்கே?
அரசியல் தீர்வுஎங்கே?…
எல்லாம் செய்துமுடிப்போம் என்றஉங்கள்
கூச்சலுக்குஒன்றும் குறைச்சல் இல்லை.
போதியஅரசியல் பலமின்றியே
முடிந்ததைநடத்திக்காட்டினார்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
ஆனாலும் அரசியல் பலமிருந்தும் நீங்கள்
ஒருகீரைப்பாத்திக்குக் கூட
கிள்ளித்தண்ணீர் தெளித்ததில்லை.
தமிழர் தரப்பின் சார்பில்
இருப்பவர் அதிகாரத்தில் இருந்திருந்தால்
நடப்பதுயாவும் நன்றாகவேநடந்திருக்கும்.
இதுவேஇன்றுதமிழ் மக்களின்
ஆழ்மனவிருப்பங்களாகமாறிவருகிறது.
செய்யுங்கள்…. இல்லைஎன்றால்
அடுத்தவனாவதுசெய்யட்டும் என்று
விலகுங்கள்!
மறுபடியும்
மறுமடலில் சந்திப்போம்!
நன்றி!

Related posts: