முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு – பேருந்து கட்டண அதிகரிப்பு?

Friday, May 11th, 2018

எரிபொருள் விலைகள்  திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பால் தொடர்ந்து சேவையை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிசாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்பட்ட 50 ரூபா இனிமேல் 60 ரூபாவாக மாற்றமடையும் எனவும்  அடுத்த கிலோ மீற்றர்களுக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறும் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: