மீண்டும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Wednesday, November 8th, 2017

இம்மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு , கம்பஹா , களுத்துளை , குருநாகல் , புத்தளம், இரத்தினபுரி, கேகாலை , யாழ்ப்பாணம் , கல்முனை , கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட்ங்கள் தொடர்ந்தும் டெங்கு அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அனைத்து அரச நிறுவனங்களின் வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள் ,பாடசாலைகள் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் முதலான டெங்கு குடமபிகள்  பரவக்கூடிய பகுதிகள் கண்டறிந்து துப்பரவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: