மாணவி வித்தியா படுகொலை வழக்கு: மீண்டும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா விசாரிக்கப்பட்டார்!

http://nethnews.lk/article/44713புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான சுவிஸ் குமாரை பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டை அடுத்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸே்வரனிடம் குற்ற விசாரணை திணைக்களம் நேற்றைய தினம் மீண்டும் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த வழக்கு தொடர்பில் விஜயகலாவிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்ட சுவிஸ் குமார் எனப்படும் பிரதான சந்தேக நபர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த குற்றவாளியை இராஜாங்க அமைச்சர் விஜயகலா விடுவித்து கொழும்புக்கு தப்பிக்கவைத்தார் என செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் அவர் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|