பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் சுங்க அதிகாரிகள்!

Sunday, February 4th, 2018

தங்களது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சுங்கஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி ஆரம்பித்த சட்டப்படியான பணி செய்யும் போராட்டம் தொடர்வதாக அந்த சங்கத்தின் தலைவர் லால் வீரகோன்தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் தாம் ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டம் காரணமாக சந்தைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குதட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: