பறி போகிறது தேர்தலில் போட்டியிடும் பொதுத்துறை ஊழியர்களின் பதவிகள்

தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது சேவையில் இருந்து ராஜினாமா செய்யும் பொதுத்துறை ஊழியர்கள், மீண்டும் அவர்கள் வகித்த பதவிக்கு திரும்ப முடியாது, என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சின் செயலாளர் J.J.ரத்தனசிறி இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்திருப்பதால் பொது சேவைகளில் கடமையாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பல ஊழியர்கள் பாதிப்படைய உள்ளதாக தெரிவித்தார்.
அப்படியானவர்கள் அவர்கள் வகித்த முந்தைய பதவிக்கே திரும்ப முடியாது எனவும் வேறு பொது நிறுவனங்களில் பொது சேவைக்கு சேர முடியும் எனவும் தெரவித்த அமைச்சின் செயலாளர் அமைச்சரவை முடிவு தொடர்பில் அணைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் இந்த வாரம் ஒரு சுற்று நிருபம் அனுப்பப் படும் எனவும் தெரவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை எனத் தெரிவிக்கிறார்கள் நோக்கர்கள்.
Related posts:
|
|