பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை!

Wednesday, September 6th, 2017

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை தனது இல்லத்தில் கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வெகு அருகில் இருந்து அடையாளம் தெரியாத யாரோ கவுரியை சுட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். கவுரியின் மரணத்திற்கு கேரளா மற்றும் மேற்கு வங்காள முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Related posts:

வெளி இடங்களிலிருந்து வருபவர்களை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - பிரதி பொல...
ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருகின்றது - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு...
வீசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப...